துணை முதலமைச்சருக்கு கொரோனா ‘பாசிட்டிவ்’…! எல்லாரும் கவனமாக இருக்க அட்வைஸ்…!
அகமதாபாத்: குஜராத் மாநில துணை முதலமைச்சர் நிதின் படேலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
குஜராத் மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருப்பவர் நிதின் படேல். அவர் தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளார்.
டாக்டர்களின் அறிவுரையின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறி உள்ளார். தமக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறிய நிதின் படேல், அண்மையில் தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் எல்லாம் தனிமைப்படுத்தி கொண்டு உடல்நலனி அக்கறை காட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.