Sunday, May 04 12:44 pm

Breaking News

Trending News :

no image

முதல்வர் ஸ்டாலின் போடும் லாக்டவுன் 'பிளான்'…? விரைவில் அறிவிப்பு


சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கை தொடரலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. நாள்தோறும் பாதிப்பு என்பது அதிகரித்து வருவது ஒரு பக்கம் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதிகரிக்கும் பாதிப்பை கருத்தில் கொண்டு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு வரும் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் நடமாட்டம் குறையவில்லை. ஏதாவது ஒரு காரணம் சொல்லி மக்கள் இன்னமும் வெளியில் திரிந்து கொண்டு இருக்கின்றனர். காவல்துறையின் தடுப்புகளும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன.

கடுமையான கட்டுப்பாடுகளுடன் உள்ள முழு ஊரடங்கு வரும் 7ம் தேதிக்கு பின்னரும் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் வரக்கூடிய இந்த ஊரடங்கில் சில முக்கிய மாற்றங்களை செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களை முதல் கட்டமாக பிரித்து அந்த மாவட்டங்களுக்கு மட்டும் கடுமையான கட்டுப்பாடுகளை தொடரலாம் என்பதாகும். மேலும் அந்த மாவட்டங்களில் தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட தடுப்பு பணிகளை வேகப்படுத்தவும் திட்டமிட்டு உள்ளாராம்.

குறிப்பாக கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் சிறப்பு கவனம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாவட்டங்களில் லாக் டவுனை தளர்த்துவது இல்லை என்று தொற்று குறைவாக காணப்படும் மாவட்டங்களில் சில தளர்வுகளை அறிவிக்கலாம் என்று முடிவு செய்துள்ளாராம். அதாவது காலை 10 மணி வரை கடைகளை திறக்க அனுமதிக்கலாம், மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதி தரலாம் என்று முடிவெடுத்துள்ளாராம்.

லாக்டவுனை நீட்டித்துக் கொண்டே சென்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விடும் என்பதால் இதுபோன்ற மாற்று திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதுதொடர்பான அறிவிப்புகள் தீவிர ஆலோசனைக்கு பின்னர் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular