அண்ணாமலை.. ஆம்பிளையா இருந்தா கேஸ் போடு…! தில் காட்டிய செந்தில் பாலாஜி
சென்னை: மின்வாரியத்தில் ஊழல் நடப்பதாக கூறும் அண்ணாமலை ஆம்பிளையா இருந்தா கேஸ் போடட்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விட்டு இருக்கிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் ஆகவே ஆகாது. இது அரசியலை கவனிக்கும் அனைவருக்கும் தெரியும். எப்போது எது நடந்தாலும் தமிழக அரசு மீது குற்றம்சாட்டி வரும் பாஜக, செந்தில் பாலாஜி விவகாரத்தில் எப்போதும் அதிரடியையே காட்டி வருகிறது.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து அதிமுக, பாஜக கட்சிகள் போராட்டத்தை நடத்தி உள்ளன. கேஸ் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வுக்கு பாஜக வாய் திறக்காமல் மின்கட்டண உயர்வுக்கு மட்டும் கொடி பிடித்து கோஷம் போடுகிறது என்று கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், மின்வாரியம் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பாஜக தலைவர் அண்ணாமலை வைத்து வருகிறார். நிலக்கரி கொள்முதலில் ஊழல் என்றும் அவர் பேசிய வருகிறார்.
இதற்கெல்லாம் அதிரடியாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:
மரபுசாரா மின் உற்பத்தியில் தமிழ்நாடு மின்வாரியம் சாதனை படைத்து இருக்கிறது. அனைத்து திட்டங்களும் 2023ம் ஆண்டு மார்ச்சில் நிறைவு பெறும்.
மின்வாரிய செயல்பாடுகளில் தவறு இருந்தால், தவறுகளை நிரூபிக்கக்கூடிய ஆதாரம் இருந்தால் கோர்ட்டை நாடலாம். விளம்பரங்களுக்காக கூறப்படும் அரைவேக்காட்டுத்தனங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.
ஆம்பிளையா, தைரியமிருந்தால் வழக்கு தொடுக்கட்டும். நேர்மை இருந்தால் வழக்கு தொடுக்கலாம், அதற்கு நிச்சயம் பதில் தருவோம் என்று கூறி இருக்கிறார்.