பத்திரிக்கையாளர்களை திடீர்னு அழைத்த ஓபிஎஸ்…! விஷயம் வேற…!
போடிநாயக்கனூர்: தேனி மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் முன்னாள் துணை முதலமைச்சரும் போடி தொகுதி எம்எல்ஏவுமான ஓபிஎஸ் இன்று பார்வையிட்டார்.
அதிமுகவில் யாருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற முடியாமல் இருந்த ஓபிஎஸ்சின் அடுத்த மூவ் எப்படி இருக்கும் என்று சொந்த கட்சிக்காரர்களே எதிர்பார்த்து உள்ளனர். இந் நிலையில் ஓ பன்னீர்செல்வம் அலுவலகத்தில் இருந்து இன்று காலை தேனி மாவட்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் அழைப்பு சென்றுள்ளது.
என்னவாக இருக்கும் என்று எதிர்பார்த்த பத்திரிகையாளர்கள் விழுந்தடித்து கொண்டு ஓடினர். அங்கு ரெடியாக ஒரு வாகனம் இருக்க அனைவரும் அதில் ஏறிக் கொண்டனர். அங்கே இருந்து அனைவரும் மேற்கு தொடர்ச்சி மலைப் பக்கம் அழைத்து செல்லப்பட்டனர்.
தேனி மாவட்டம், போடிமெட்டு பகுதியில் உள்ள குட்டையடி, குரங்கணி பகுதிகளில் டவ் தே புயல் தாக்கத்தால் அறுவடைக்கு தயாராக இருந்த மாந்தோப்புகள் சேதம் அடைந்துள்ளன. விவசாயிகள் பெரும் கவலையில் இருக்க, அங்கு பார்வையிட செல்வதற்காக ஓபிஎஸ் சென்றிருக்கிறார். அதற்கு தான் பத்திரிகையாளர்ளுக்கு அழைப்பு போய், வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்திருக்கிறது. வேறு ஏதே அரசியல் பரபரப்பு இருக்கும் என்று நினைத்த பத்திரிகையாளர்கள் இதனால் சற்றே ஏமாற்றம் அடைந்தனர்.