Sunday, May 04 11:58 am

Breaking News

Trending News :

no image

வெளியூர் போகணும்னா இப்படி பண்ணுங்க…! இ - பாஸ் தேவையில்லை…!


சென்னை: மாவட்டங்கள், மாவட்டகளுக்குள் செல்ல இ பாஸ் தேவையில்லை, அதற்கு பதிலாக இ பதிவு ( E registration) இருந்தால் போதும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவை ஒழிக்க வேண்டும். அது ஒன்று இப்போதைக்கு சவாலான பணி என்பதால் அரசு இயந்திரம் முழுக்க, முழுக்க அதிலேயே கவனம் செலுத்தி வருகிறது. அதற்கான நடவடிக்கைகள் ஒரு பக்கம் வேகம் எடுத்திருந்தாலும் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

அதன்படி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வருவவோருக்கு இ பதிவு என்பது கட்டாயமாக்கப்படுகிறது. திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலும் செல்ல இ பதிவு முறை கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.

ஆனால் இந்த அறிவிப்பானது இ பாஸ் கட்டாயம் என்ற பெயரில் செய்திகளாக வெளியிடப்பட்டிருந்தன. அதன் காரணமாக மக்களிடம் குழப்பம் எழ… இப்போது தமிழக அரசு ஒரு விளக்கத்தை வெளியிட்டு உள்ளது.

அதாவது இ பாஸ் என்பது வேறு…இ பதிவு என்பது வேறு. மாவட்டங்களுக்குள், மாவட்டங்களில் பயணம் செய்ய இ பதிவு கட்டாயம். சரி…இந்த இ பதிவு என்பது என்ன? அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம்..

இந்த இ பதிவானது இ பாஸில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்த இ பதிவு எடுக்க https://eregister.tnega.org என்ற இணையத்தில் இ பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்ததற்கான ஆதாரத்தை வைத்து கொண்டு நாம் எங்கு செல்ல வேண்டுமோ, அங்கு பயணிக்கலாம்.  இந்த நடைமுறையை தான் இ பாஸ் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இங்கு தான் மக்கள் ஒரு முக்கிய வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். இ பாஸ் பெற அதற்கான இணையத்தில் விண்ணப்பித்து, ஒப்புதல் பெற்று அதற்கான ஆவண சான்றை பயணத்தின் போது காட்ட வேண்டும. ஆனால் இ பதிவில் நாம் விண்ணப்பித்து இருக்கிறோம் என்ற ஆவணத்தை காட்டினாலே பயணிக்கலாம். எந்த தடையூறும் இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

Most Popular