Monday, May 05 12:35 am

Breaking News

Trending News :

no image

பாஜகவை ‘பங்கம்’ பண்ணிய ஆடியோ…! செதைச்சுட்டாய்ங்க….!


பாஜகவையும், அமலாக்கத்துறையையும் மையப்படுத்தி இணையத்தில் ஓடும் செல்போன் ஆடியோ வேற லெவலில் இருக்கிறது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் மிக முக்கியமானது அமலாக்கத்துறை இயக்குரகம். இந்த துறையின் முக்கிய பணியே பொருளாதார சட்டத்தை அமல்படுத்தி, அது தொடர்பான குற்றங்களை தடுப்பதுதான்.

நாட்டின் பொருளாதாரச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டு உள்ள துறை என்பதால் இதற்கு அமலாக்கத்துறை என்று பெயர். இதன் அலுவலகங்கள் டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், சென்னை, கொல்கத்தா என பல்வேறு நகரங்களில் இயங்குகின்றன.

அண்மைக்காலமாக அரசியல் களத்தில் சிபிஐ, வருமானவரிக்கு அடுத்து அனைத்து தரப்பினராலும் உற்று நோக்கப்படும் துறை அமலாக்கத்துறை தான்… காரணம் இதை கொண்டே தமது அரசியல் எதிரிகள், அரசியல் நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் பாஜக அரங்கேற்றி வருகிறது என்ற கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுவதே.

இந்த விமர்சனங்களில் குறிப்பாக மத்திய அரசை எதிர்க்கும் அரசியல்வாதிகள் மேல் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கப் படுவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் பாஜகவில் இணைந்துவிட்டால் அந்நடவடிக்கை அப்படியே அடக்கி வாசிக்கப்படுவதாகவும் உதாரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

இப்படி கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும், நகைச்சுவைக்காக சில விஷயங்கள் முன் வைக்கப்படுவதும் உண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில், இணையத்தில் ஒரு தொலைபேசி உரையாடல் வைரலாகி சக்கை போடு போடு போடுகிறது.

முழுக்க முழுக்க இந்தி மொழியில் அந்த உரையாடல் இடம்பெற்று உள்ளது. அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் போன் செய்து பேசுகிறார், மறுமுனையில் இருக்கும் பாஜக உறுப்பினர் அதை அட்டெண்ட் செய்கிறார்.

அந்த உரையாடலில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் தமிழில் மொழிபெயர்த்து கீழே வழங்கப்பட்டு உள்ளது.

உரையாடல் விவரம்:

பாஜக நிர்வாகி: ஹலோ…! (கெத்தாக பேசுகிறார்)

அமலாக்கத்துறை அதிகாரி: ஹலோ…!

(மறுமுனையில்) பாஜக: ஆங்…. சொல்லுங்க…!

அமலாக்கத்துறை அதிகாரி:  நான் ED (அமலாக்கத்துறை) அலுவலகத்தில் இருந்து பேசறேன் அண்ணா…!

(மறுமுனையில் சில விநாடிகள் பயங்கர அமைதி)

பாஜக நிர்வாகி: ஆங்… ஆங்.. (குரலில் நடுக்கம்).. என்னது..? ED ஆபிசில் இருந்தா..? நான் நேத்திக்கே பாஜகவில் சேர்ந்துட்டேனே…!

அமலாக்கத்துறை: sorry, sorry, sorry… wrong number…  தப்பா கூப்பிட்டு விட்டேன்.

பாஜக நிர்வாகி: நன்றி சார் ரொம்ப நன்றி(குரலில் லேசாக மகிழ்ச்சி)

போன் வைக்கப்பட… உரையாடல் முடிகிறது. இந்த உரையாடல் செய்தியின் கீழே புரிதலுக்காக இணைக்கப்பட்டு உள்ளது.

முழுக்க, முழுக்க.. இந்தியில் இந்த உரையாடல் இடம்பெற்று இருந்தாலும், அதில் இடம்பெற்றுள்ள நகைக்சுவையை பெரும்பாலோனோர் ரசிக்கவே செய்கின்றனர். இதை காணும் பாஜக ஆதரவாளர்கள் PRANK என்று கூறி வருகின்றனர். வேண்டும் என்றே பாஜக மீது குற்றம்சாட்ட எடுக்கப்பட்டது என்று மறுத்துள்ளனர். எது எப்படியோ… இணையத்தில் இந்த வீடியோ பலராலும் ரசிக்கப்படுகிறது என்பதே உண்மை…!

Most Popular