பெத்தவங்க கண் முன்னால்… கல்லாய் மாறும் பச்சிளம் குழந்தை…!
லண்டன்: இங்கிலாந்தில் பெற்றோ கண் முன்னே, குழந்தை ஒன்று கல்லாய் மாறி வரும் நிகழ்வு அனைவரையும் கலங்கடித்து வருகிறது.
உலகில் யாருக்கு எவ்வளவோ சொத்து இருந்தாலும், இல்லாவிட்டாலும் மழலை என்னும் செல்வத்துக்கு ஈடாகாது. அப்படிப்பட்ட பெரும் சொத்து தான் மழலைகள்.
ஆனால் மழலை ஒன்று அனைவரின் கண் முன்னே கல்லாக மாறி கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்..? அப்படி ஒரு சம்பவம் இங்கிலாந்து நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது.
இங்கிலாந்தில் உள்ள இந்த குழந்தையின் லெக்சி ராபின்ஸ். 2021ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி இந்த பூவுலகுக்கு வந்தது. இயல்பாக பிறந்த நாள் முதல் குழந்தையின் கட்டை விரல், கால் விரல்களை அசைக்கவே முடியாதது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக குழந்தையை வாரி சுருட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடி இருக்கின்றனர் பெற்றோர். சரி… என்ன பிரச்னையாக இருக்கும் மருத்துவர்கள் ஆய்வில் இறங்கினர். பல கட்ட பரிசோதனைகளுக்கு பின்னர் அந்த பச்சிளம் குழந்தைக்கு அரிதிலும் அரிதான நோய் இருப்பது தெரிய வந்தது.
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துகளையும் குழப்பிவிட்டு எழுதினால் எப்படி இருக்கும். அப்படி இருக்கிறது நோயின் பெயர்… அது தான் fibrodysplasia ossificans progressiva.
இந்த நோய் 20 லட்சம் பேரில் ஒருவருக்கு தான் வருமாம். அதுதான் இப்போது இந்த குழந்தைக்கு வந்திருக்கிறது. இதன் பாதிப்புகள் சற்றே மயக்கம் தருவதாக உள்ளது. ஒருவரின் எலும்புகளுக்கு வெளியிலும் புதிய, புதிய எலும்புகள் தோன்றும்.
அதாவது தசைப்பகுதிகள் அனைத்தும் எலும்பாக மாறிவிடும். பாதிக்கப்பட்ட நபர்களின் உடல் கொஞ்சம், கொஞ்சமாக கல்லாக மாறும். இந்த நோய்க்கு பூவுலகில் இதுவரை சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட நபருக்கு ஊசி, சிகிச்சை தரமுடியாது என்பது தான் சோகம்…!