வேற வழியே இல்ல..! ஸ்டாலினுக்காக ‘வாய் திறந்த’ அண்ணாமலை..
சென்னை: தமிழ் பெருமையை உலகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் எடுத்து சென்றுள்ளதை பாராட்டுகிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இன்று முதல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: நாங்கள் அரசியல் பேச விரும்பவில்லை. பிரதமர் மோடியின் தமிழக வருகை சரித்திர நாள். தமிழ் கலாச்சாரத்தை சரியாக அற்புதமாக முதல்வர் ஸ்டாலின் வடிவமைத்து, காட்சிப்படுத்தி உள்ளார்.
5 ஆயிரம் வருடம் பாரம்பரியம் கொண்ட தமிழின் பெருமையை எடுத்து சென்றிருக்கிறார். தொடக்க விழாவை அற்புதமாக நடத்திய தமிழக அரசுக்கு பாராட்டுகள். இந்த முறை முதல்வரின் பேச்சு,நடவடிக்கை சரியாக இருந்தது. கூட்டணிக்கு இடமே இல்லை என்று கூறினார்.