நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களா..? இதோ முக்கிய அறிவிப்பு
டெல்லி: எம்பிபிஎஸ் படிப்புக்கு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம் தரப்பட்டு உள்ளது.
எம்பிபிஎஸ்சில் முதுகலை பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தி வருகிறது. கொரோனா காரணமாக ஏப்ரல் 18ம் தேதி நடத்தப்பட இருந்த இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.
மருத்துவ இளநிலை படிப்புக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி நடக்கிறது. முதுகலை நீட் தேர்வு செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வுகள் முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதால் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம் தரப்பட்டு உள்ளது. அதற்கான அறிவிப்பை தேசிய தேர்வுகள் வாரியம் வெளியிட்டு உள்ளது.
வரும் செப்டம்பர் 11ல் நடக்க உள்ள NEET PG விண்ணப்பதாரர்கள் 27% ஓபிசி அல்லது பத்து சதவீதம் EWS இட ஒதுக்கீட்டில் உரிமை கோர விரும்பினால் வரும் 16ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம். மாற்றம் செய்து கொள்ள விரும்புவோர் https://nbe.edu.in/ என்ற இணையதளத்தில் சென்று திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.