இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய TOP 10 முக்கிய செய்திகளை பார்க்கலாம்:
மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக மேலும் 3 காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இதையடுத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது.
அரசியல் பழிவாங்கும் படலம், மத்திய பாஜக ஆட்சியில் நடைபெற்று வருவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி குற்றம்சாட்டி உள்ளார்.
சபரிமலையில் வரும் 27ம் தேதி மண்டல பூஜை தொடங்க உள்ள நிலையில் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை 39 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி ஒரு சிலிண்டர் 1929.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளம் வடியாத காரணத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடிக்கு வழக்கம் போல் ரயில்கள் இயங்கும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சீரமைப்பு பணிகள் முழுமை அடைந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே கூறி உள்ளது.
580வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் நோக்கில் இலங்கையில் அந்நாட்டு தமிழ் கட்சிகளுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளார்.
புரோ கபடி லீக் தொடரில் இன்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.