#Michaung வருகிறது மிக்ஜாம் புயல்…! காத்திருக்கும் டிச.1
சென்னை: அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நாள்தோறும் ஏராளமான மாவட்டங்களில் பலத்த மற்றும் கனமழை பதிவாகி வருகிறது.
இந் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:
தெற்கு அந்தமான், மலாக்கா கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாகி இருக்கிறது. இது வரும் 29ம் தேதி தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர் 1ம் தேதி வலுப்பெறும்.
அதன் பின்னர் புயலாக உருமாறி வலுவடையும். இந்த புயலுக்கு மியான்மர் சிபாரிசு செய்துள்ள மிக் ஜாம் (Michaung/ Migjaum) என்ற பெயர் சூட்டப்படும் என்று கூறி உள்ளது.
இதனிடையே தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு எதிர்பார்க்கலாம். மாவட்ட பட்டியல் வருமாறு;
சென்னை
செங்கல்பட்டு
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
திருவண்ணாமலை
தஞ்சை
வேலூர்
ராணிப்பேட்டை
விழுப்புரம்
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
சிவகங்கை
விருதுநகர்
கடலூர்