Sunday, May 04 12:38 pm

Breaking News

Trending News :

no image

அடுத்த அடி… சமையல் கேஸ் சிலிண்டர் வினியோகம் கிடையாது..? புது சிக்கல்


டெல்லி: கொரோனாவின் தாண்டவத்தால் வீடுகளுக்கு சமையல் கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த கொரோனாவால் இன்னமும் என்ன  என்ன பிரச்னைகள் எல்லாம் வரப் போகிறது என்று தெரியவில்லை. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிக எண்ணிக்கையில் பதிவாகி பல மாநிலங்கள் ஊரடங்கை நடைமுறைப்படுத்தி இருக்கின்றன.

மருந்து, குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக எந்த தடையும் இதுவரை இல்லை. குறிப்பாக கொரோனா தொற்றின் அச்சத்தின் பிடியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் தடையின்றி நடந்து வந்தது. ஆனால் இப்போது அதற்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான சிலிண்டர் பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக சமையல் எரிவாயு வினியோக கூட்டமைப்பானது தகவல் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு சிலிண்டர் வினியோகத்தில் எவ்வித சிக்கலும் இன்றி பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு சபாஷ் போட வைத்தனர். ஆனால் இந்தாண்டு நிலைமை அப்படி இல்லை என்பது தான் சோகம். எனவே அவர்களையும் முன்கள பணியாளர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை சமையல் எரிவாயு வினியோக கூட்டமைப்பு விடுத்துள்ளது.

Most Popular