என்ன சொல்றிங்க..? காரைக்குடி தொகுதியை திருப்பி கொடுக்கலாமா? அதிர வைத்த ப.சி.
காரைக்குடி: கட்சியினரிடம் ஒத்துழைப்பு இல்லாததால் காரைக்குடி தொகுதியை திருப்பி கொடுத்துவிடலாமா என்று கூறி அதிர வைத்துள்ளார் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம்.
காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பேசியதாவது:
கட்சி என்றால் கடமை உணர்வுடன் செயல்படவேண்டும். இல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் 25 தொகுதிகள் கூட கிடைக்காது. காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடம் ஒத்துழைப்பு இல்லை. புதுவயல் பூத் கமிட்டி கூட்டத்துக்கு காங்கிரஸ் பொறுப்பாளர்கள் வரவில்லை.
கட்சியினரிடம் ஒத்துழைப்பு இல்லை, எனவே காரைக்குடி தொகுதியை திருப்பி கொடுத்துவிடலாமா? என்று கேள்வி எழுப்பி அதிர வைத்துள்ளார்.