சென்னை வந்த மறுநாளே ரஜினிகாந்த் ‘பண்ணிய’ காரியம்….!
சென்னை: ஐதராபாதில் இருந்து நேற்று சென்னை வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு பரபரக்க வைத்துள்ளார்.
கொரோனாவின் தாக்கம் எப்போது குறையும் என்று தெரியாத நிலைதான் இப்போது உள்ளது. நாடு முழுவதும் மருத்துவமனைகளும், சுடுகாடுகளிலும் தான் கூட்டம், கூட்டமாக மக்கள் நிரம்பி இருக்கின்றனர். ஊரடங்கில் மக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டால் கொரோனா 3வது அலையின் பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர்.
கொரோனாவை வெல்லும் ஒரே ஆயுதம் தடுப்பூசி என்பதால் அதனை வேகப்படுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன. அரசியல்வாதிகளும், திரையுலகத்தினரும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.
இந் நிலையில் ஐதராபாத்தில் இருந்து அண்ணாத்த ஷூட்டிங் முடிந்து நேற்று சென்னை வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு கலக்கி இருக்கிறார். இந்த விவரத்தை அவரது மகள் சவுந்தர்யா தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
தலைவர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார். கொரோனா தொற்றுக்கு எதிரான போரை அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். இது தவிர ரஜினிகாந்த் ஊசி போட்டுக் கொள்ளும் போட்டோவை வெளியிட்டு அசத்தி உள்ளார்.