ரூ.2000 கோடி போதை பொருள் கடத்தல்..? பிரபல டைரக்டர் போட்ட வீடியோ
சென்னை; 2000 கோடி ரூபாய் போதை பொருள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநரான அமீர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அண்மையில் டெல்லியில் குடோன் ஒன்றில் போலீசார் சோதனை நடத்திய போது 1700 கிலோ போதை பொருள் சிக்கியது. சர்வதேச அளவில் இதன் மதிப்பு 2000 கோடி ரூபாயை தாண்டி இருக்கும் என்று கூறப்பட்டது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் திமுக முன்னாள் நிர்வாகி மற்றும் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர் தமிழ் சினிமாவின் பல படங்களுக்கு பைனான்ஸ் செய்ததும், படங்களை தயாரித்ததும் தெரிய வந்தது.
குறிப்பாக இயக்குநர் அமீரின் இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தை தயாரித்துள்ளார். அதனால் அமீருக்கும், இந்த போதை பொருள் கடத்தல் சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கும் என்று பரவலாக பேசப்பட்டது.
இந் நிலையில் அமீர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த விவகாரத்தின் உண்மை தன்மை என்ன? என்பதை விளக்கி உள்ளார். இந்த கடத்தல் விவகாரத்தில் தமது பெயரை இழுப்பதன் மூலம் களங்கத்தையும், குடும்பத்துக்கு மனக்கஷ்டத்தை மட்டுமே தர முடியும், வேறு ஒன்றும் பயனில்லை என்று அவர் கூறி உள்ளார்.
அவரின் இந்த வீடியோ செய்தியின் கீழே இணைப்பாக கொடுக்கப்பட்டு உள்ளது.