எட்டி உதைக்க சொன்ன ஓபிஎஸ்...! பகீர் கிளப்பிய சி.வி. சண்முகம்
டெல்லி: எம்ஜிஆர் மாளிகையை எட்டி உதைக்க சொல்லி அதை பார்த்துக் கொண்டிருந்தவர் ஓ பன்னீர் செல்வம் என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன, அதற்கான ஆவணங்களுடன் டெல்லிக்கு பறந்தார் சிவி சண்முகம். அனைத்தையும் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: பொதுக்குழுவில் எடுத்த முடிவுகளை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துவிட்டோம். தீர்மானங்கள், சட்ட திருத்தங்கள் உள்ளிட்டவை தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டு விட்டது.
கட்சியில் பிளவு வரலாம், சண்டை போட்டு வெட்டிக்கலாம். எல்லாம் நடக்கும். அப்புறம் ஒன்றாக இணைவது எல்லாம் சகஜம். இது எல்லா கட்சிகளிலும் நடந்த ஒன்றுதான். அதிமுக ஒன்றும் அதற்கு விதி விலக்கல்ல.
இஸ்லாமியர்களுக்கு மெக்கா, கிறிஸ்துவர்களுக்கு ரோம்… அதுபோல தான் ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்கும் எம்ஜிஆர் மாளிகை தான் கோயில். ஆனால் பன்னீர்செல்வம் வேனில் உட்கார்ந்தபடி அதன் கதவை எட்டி உதைக்குமாறு சொல்லி அதை பார்த்து கொண்டிருந்தார். இது தாயை எட்டி உதைப்பதற்கு சமமான ஒன்று.
அவர் மீது வைத்திருந்த மதிப்பு, மரியாதை எல்லாம் போய்விட்டது. பதவி வெறி பிடித்து அலைபவர்களிடம் நியாயத்தை பார்க்க முடியாது. பொன்னையன் தமது ஆடியோ குறித்து விளக்கம் அளித்துவிட்டார். அதை நம்புகிறோம் என்று கூறினார்.