ஒரே ஒரு போன்…! ஈபிஎஸ் அணிக்கு தாவும் முக்கிய பிரமுகர்…?
ஈபிஎஸ்சுக்கு ஆதரவாக வந்துள்ள நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக பன்னீர் அணியின் முக்கிய தலைவர்கள் குழம்பி போய் உள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் நேற்று வெளியிட்ட தீர்ப்பு எடப்பாடி அணிக்கு பெரும் சாகமாகவும், ஓபிஎஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக தான் உள்ளது.
தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ஐகோர்ட் ரத்து செய்யும் என்று எடப்பாடியே நம்பவில்லை என்று கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். தீர்ப்புக்கு பின்னர் இப்போது பன்னீர் ஆதரவாளர்கள் நிலைமை தான் அம்போவென்று போயிருக்கிறதாம்.
நம்பிக்கையாக இருங்கள் சொல்லி கொண்டிருந்த ஓபிஎஸ் தீர்ப்பு வெளியான மறுநிமிடமே பெருத்த அதிர்ச்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார். தேனியில் தன் வீட்டில் இருந்த அவருக்கு தீர்ப்பு பாதகமாக வந்துள்ளதை கண்ட ஆதரவாளர்களும் என்ன செய்வது என்று குழம்பி உள்ளனர்.
உடனடியாக மனோஜ் பாண்டியனை ஓபிஎஸ் தரப்பு தொடர்பு கொண்டு விவரம் கேட்க… தீர்ப்பின் முழு விவரமும் வந்த பின்னரே எல்லாம் தெரியும் என்று கூறப்பட்டு இருக்கிறது. பின்னர் தனி நீதிபதி தீர்ப்பு ரத்து என்று உறுதியாக செய்தி கூறப்பட, உடனே சென்னைக்கு புறப்பட்டு இருக்கிறார் ஓபிஎஸ்.
இந்த இடைப்பட்ட வேளையில், எடப்பாடி அணியின் உற்சாகம் தமிழகம் முழுவதும் எதிரொலித்தது. பட்டாசுகள், இனிப்புகள், கட்சி கொடியுடன் வலம் என்று களைகட்டி இருக்கிறது. இந்த சந்தோஷ நிகழ்வுகளுக்கு இடையே தான் சில முக்கியமான சங்கதிகளும் நடந்திருக்கின்றன என்று கூறுகின்றனர் எடப்பாடி அணியினர்.
தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களில் ஓபிஎஸ் அணியில் உள்ள முக்கிய தலைகளை இழுக்கும் அசைன்மென்ட் எடப்பாடி அணியில் இருந்து ஆரம்பித்துவிட்டதாம்.
ஓபிஎஸ்சின் வலது, இடது கைகள், அவர்களின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் எடப்பாடி அணியில் இருந்து போன் போயிருக்கிறதாம்.
போதும். கோர்ட் தீர்ப்பு வந்துவிட்டது, உங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கைவிட்டு விடுகிறோம், எந்த கோபமும் இல்லை, வந்துவிடுங்கள் என்று போன் மூலம் தூது போயிருக்கிறதாம். குறிப்பாக தஞ்சையை சேர்ந்த ஓபிஎஸ்சின் வலதுகரமான நபருக்கு போன போன் பற்றி தான் பேச்சாக இருக்கிறதாம்.
அழைப்பை கேட்ட அவரும் எந்த ரெஸ்பான்சும், பதிலும் சொல்ல வில்லையாம். இதை அறிந்த அவரது ஆதரவாளர்களும் என்ன செய்வது என்றே படு குழப்பத்தில் வலம் வர ஆரம்பித்து உள்ளனராம். இந்த வலதுகரத்தை இழுத்தால் ஒட்டுமொத்த பன்னீர் அணியை இழுத்தது போன்று என்பதால் வெயிட்டாக மீண்டும் பேச எடப்பாடி அணி முடிவு செய்து உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
எடப்பாடி அணியின் இந்த க்ரீன் சிக்னலை எதிர்பார்க்காத பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்தபடி உள்ளனர். மதில்மேல் பூனை போல தவிக்கும் பன்னீர் ஆதரவாளர்கள் மனம் மாறுவார்கள் என்றும் அதற்கான அடுத்தகட்ட ஸ்கெட்ச் தயார் என்றும் கண்சிமிட்டுகின்றனர் ஈபிஎஸ் அணியினர்… ஆக மொத்தம் இனி வரும் நாட்களில் கோபாலா பிச்சிக்கோ என்ற வசனம் தான் கேட்கும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்…!