அரசு ஊழியரா..? குட் நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்
சென்னை: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தேசியக்கொடியேற்றினார். பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியாவது: சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்டது தமிழகம். அடிமைத்தனத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் தமிழர்கள். எனவே ஒரு தமிழனாக நான் இங்கு பெருமைப்படுகிறேன். விடுதலை போராட்ட தியாகிகளை போற்றுவதில் எப்போதும் திமுக அரசு முன்னோடி.
தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் நாம் விடுதலை பெற்ற இந்நன்னாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்.
ஓய்வூதியதாரர்களுக்கு 31 சதவீதம் அகவிலைப்படி என்பது 34 சதவீதமாக உயர்த்தி தரப்படும். விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாத ஓய்வூதியம் 18 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று கூறினார்.