2 வாரத்தில் அடுத்தடுத்து மரணம்.. ! முதலில் மகன், இப்போது கணவர்..! பிரபல நடிகை கதறல்
சென்னை: பிரபல நடிகை கவிதாவின் கணவர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா என்னும் தொற்று தமிழ் திரையுலக பிரபலங்களை இப்போதைக்கு விடாது போல் தெரிகிறது. தொடர்ந்து பல்வேறு முக்கிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றுக்கு பலியாகி வருகின்றனர்.
அந்த வரிசையில், பிரபல நடிகையும், தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருபவருமான கவிதாவின் கணவர் காலமாகி உள்ளார். கொரோனா தொற்றால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு இருந்தார்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணவர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கிறார். கடந்த 15ம் தேதி தான் மகன் சாய் ரூப் கொரோனா தொற்றுக்கு பலியானார்.
அந்த சோகம் மறைவதற்குள் கணவரையும் நடிகை கவிதா பறி கொடுத்துள்ளார். அடுத்தடுத்து நிகழ்ந்த 2 பெருந்துயரத்தால் நடிகை கவிதா கலங்கி போயிருக்கிறார். அவரை நிலையை அறிந்த சக பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.