அதிமுகவில் இப்படியா நடக்கணும்..? மானத்தை வாங்கிய முன்னாள் அமைச்சர்…!
சென்னை: தேர்தல் ஆணைய கூட்டத்தில் அதிமுக பெயர் பலகைக்காக ஜெயக்குமாரும், கோவை செல்வராஜூம் மல்லுக்கட்டியது சிரிப்பாக இருந்தது.
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பங்கேற்க முதல் ஆளாக வந்தவர் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்.
அதன் பின்னர் ஈபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் வந்தார். அப்போது அதிமுக என்ற பெயர் பலகை கோவை செல்வராஜ் அமர்ந்திருந்த இடத்தில் இருந்தது. டக்கென்று அதை எடுத்து தமது இருக்கைக்கு முன்பாக வைத்துக் கொண்டார் ஜெயக்குமார்.
மறுபடி அவரிடம் இருந்து பெயர் பலகையை கோவை செல்வராஜ் எடுத்து தம் பக்கம் வைத்துக் கொண்டார். அதிருப்தி அடைந்த ஜெயக்குமார் மீண்டும் பலகையை எடுத்து வைக்க… இப்படி மாறி, மாறி இருவரும் அதிமுக பெயர் பலகைக்கு மல்லுக்கட்டியது சிரிப்பாக இருந்தது.
ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ் மிகவும் கோபமாகவே பேசினார். ஒரு கட்டத்தில் ஜெயக்குமாரை தாளித்து எடுத்தார். அமைச்சராக, எம்எல்ஏவாக இருந்த அவர் இப்படி செய்வது கேவலமாக இல்லையா?
தரமற்ற செயல்களை செய்பவர்களை தரமானவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். சிங்கம், சிங்கிளா தான் வரும் என்று பொரிந்து தள்ளி விட்டார்.