அம்மாடியோவ்…! கொரோனாவின் கோர முகம்…! இந்தியாவில் 1 கோடி பேருக்கு பாதிப்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 1 கோடியை கடந்து அதிர்ச்சி அளித்துள்ளது.
200 நாடுகளை வலம்வரும் கொரோனாவின் கோர பசி இன்னமும் அடங்கவில்லை. சீனாவில் தோன்றினாலும் அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த கொரோனா.
உலகநாடுகளில் கொரோனா நோயாளிகள் அதிகம் கொண்ட நாடாக உள்ளது. இந்தியாவிலும் அதன் தாக்கம் இன்னமும் ஓயவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25 ஆயிரத்து 152 கோடி பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து நாடு முழுவதும் ஒட்டுமொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1 கோடியே 4 ஆயிரத்து 599 ஆக அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரத்து 885 பேர் குணம் பெற்றிருந்தாலும், 347 பேர் பலியாகி உள்ளனர். ஒட்டு மொத்தமாக பலி எண்ணிக்கையானது 1 லட்சத்து 45 ஆயிரத்து 136 ஆக உள்ளது.