தோனியின் புதிய காதல்…! புனேயில் செட்டில் ஆகிறாரா ‘தல’…?
புனே: முன்னாள் கேப்டன் தோனி புனேயில் புதிய வீடு வாங்கி இருக்கிறார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட எம்எஸ் தோனி இன்னமும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். சென்னை அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். தற்போது கொரோனா பரவலால் ஐபிஎல் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.
இந் நிலையில் புனே நகர் மீது புதிய காதல் கொண்டுள்ள தோனி ராவெத்தில் இருக்கும் எஸ்டாடோ பிரடென்சிஷியல் சொசைட்ட என்ற பகுதியில் சொந்தமாக ஒரு புதிய வீட்டை வாங்கி உள்ளார். இதற்கு முன்னர் மும்பையில் புதியதாக கட்டப்படும் தங்கள் வீட்டின் போட்டோவை அவரது மனைவி சாக்ஷி வெளியிட்டு இருந்தார்.
இப்போது அவரது குடும்பத்தினர் ராஞ்சியில் பண்ணை வீட்டில் வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான நேரத்தை அவர் தமது குடும்பத்தினருடன் செலவிட்டு வருகிறார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் காய்கறி உள்ளிட்ட பல்வேறு பிசினஸ்களை தோனி செய்து வருகிறார். புதியதாக எம்எஸ்டி என்டெர்டெய்ன்மென்ட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தையும் தோனி நடத்தி வருகிறார்.