காத்திருந்து.. காத்திருந்து..! கடைசியில் ஆம்புலன்சில் இறந்த கொரோனா நோயாளிகள்…!
சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் இருந்த 4 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் வாசலில் கடந்த சில நாட்களாக பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வரிசையாக ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வாகனங்களில் இருப்பவர்கள் எல்லாரும் கொரோனா நோயாளிகள். மருத்துவமனைகள் ஹவுல்புல் ஆனதால் படுக்கைக்காக ஆம்புலன்ஸ் வாகனத்திலேலே வெயிட்டிங்கில் இருக்கின்றனர்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் வாசலிலும 100க்கான ஆம்புலன்ஸ்கள் வரிசையாக காத்திருக்கின்றன. அப்படி ஆம்புலன்சில் வந்த 25 பேர் சிகிச்சைக்காக காத்திருந்தனர். கிட்டத்தட்ட 5 மணி நேரத்துக்கும் மேலாக ஆம்புலன்சில் காத்திருந்த அவர்கள் அதே வாகனத்திலேயே துடிதுடித்து உயிரை விட்டனர்.
மருத்துவ சிகிச்சைக்கு வந்து படுக்கை இல்லாமல் வாசலில் பல மணி நேரம் காத்திருந்து நோயாளிகள் உயிரை விட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.