Sunday, May 04 12:54 pm

Breaking News

Trending News :

no image

ரேஷனில் இலவச மளிகை தொகுப்பு வாங்க போறீங்களா..? உஷாரா இருங்க…!


சென்னை: தமிழக அரசின் 14 வகையான மளிகை தொகுப்பில் காலாவாதி பொருட்கள் இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மக்களை அதிர வைத்துள்ளது.

கொரோனா நிவாரணமாக அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ள பயனாளிகளுக்கு 4000ரூபாய் நிவாரணம், 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. டோக்கன் மூலம் முதல் தவணையாக 2000 ரூபாய் மக்களுக்கு வழங்கப்பட்டது.

2வது தவணை ஜூன் மாதத்தில் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. நிவாரண தொகையுடன் 14 வகையான விலையில்லா மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த 14 வகையான மளிகை பொருட்கள் விவகாரத்தில் இப்போது மக்கள் அதிர்ந்து போகும் அளவுக்கு பல விஷயம் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரசு அளிக்கும் மளிகை பொருட்கள் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் தான் என்பதை மறுக்க முடியாது. ஆனால் அவை மக்களுக்கு முறையாக போய் சேருகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். இப்போது அளிக்கப்பட்டு வரும் மளிகை தொகுப்பில் காலாவதியான பொருட்கள் வைத்கப்பட்டு மக்களுக்கு தரப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து மக்களை அதிருப்திக்கு ஆளாக்கி வருகின்றன.

அதாவது டீத்தூள் பாக்கெட்டுகள் 2 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டு காலாவாதியனவையாம். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்துள்ள கொருக்கம்பேடு கிராமத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மளிகை தொகுப்புகளில் இந்த குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

டீத்தூள் மட்டுமல்ல…. வேறு சில பொருட்களிலும் இந்த குறைபாடுகள் காணப்படுகின்றன என்பது மக்களின் குற்றச்சாட்டுகளாகும். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அரசின் நற்பெயருக்கு இதுபோன்ற செயல்பாடுகள் கெட்ட பெயரை ஏற்படுத்தக்கூடும். எனவே 14 வகையான இலவச மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விஷயத்தில் அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்பது நடுநிலையாளர்களின் விருப்பமாக உள்ளது. 

Most Popular