Sunday, May 04 11:55 am

Breaking News

Trending News :

no image

ஆடையை கழற்றி…! நீட்டுக்கு எதிராக போராடிய பெண்ணை சித்வரதை செய்த போலீஸ்


சென்னை: சென்னையில் நீட்டை எதிர்த்து மக்கள் பாதை இயக்கத்தினரின் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டாக்டராக வேண்டும் என்ற தமிழக மாணவர்களின் கனவுகளை முறித்து போட்டுள்ள நீட் தேர்வு. இந்த தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் இன்னமும் தமிழகத்தில் ஓயவில்லை. அப்படி ஒரு போராட்டத்தை சென்னையில் முன்னெடுத்தது மக்கள் பாதை இயக்கம்.

அந்த இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் 6 பேர் கடந்த 14ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அவர்களது போராட்டத்துக்கு பெருவாரியான ஆதரவு கிடைத்தது.

7வது நாள் போராட்டத்தின் போது அவர்களை கைது செய்தது போலீஸ். அடித்து உதைத்து, ஆடைகளை இழுத்து போலீசார் அராஜகம் செய்தனர். பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டாலும், அவர்களை போலீசார் சித்ரவதைக்குள்ளாக்கி உள்ளனர்.

தரதரவென்று இழுத்து, பெண் என்றும் பாராமல் பிடிக்கக்கூடாத இடத்தில் எல்லாம் கை வைத்து அசிங்கப்படுத்தி கைது செய்தனர் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஆரா அருண் என்பவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். பெண்ணிடம் போலீசார் நடந்து கொண்ட விதம், பல்வேறு விமர்சனங்களையும் எழுப்பி உள்ளது.

Most Popular