மறைந்த எஸ்பிபி உடல் நாளை நல்லடக்கம்…! பொதுமக்கள் திரளாக அஞ்சலி
சென்னை: மறைந்த எஸ்.பி.பி. உடல் நாளை தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி எஸ்பிபி, ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் படிப்படியாக உடல்நிலை தேறி வந்த நிலையில், நேற்று அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், 51 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி.பி. இன்று மதியம் 1.04 மணிக்கு காலமானார். அவரது உடல் பொதுமக்கள், ரசிகர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்த நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள், ரசிகர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை அவரது உடல் செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.