ஒரே 'நைட்'.. மாறிய நிலைமை.. இடுப்பு எலும்பு ஒடிந்து, நடிகை சீரியஸ்..! கதறும் பெற்றோர்
சென்னை: ஒரே ராத்திரியில் நடிகை யாஷிகா ஆனந்தின் நிலைமை மாறிவிட அவரது பெற்றோர் கதறி வருகின்றனர்.
மாடல், பிரபல நடிகை, பிக்பாஸ் சீசன் பங்கேற்பாளர் என அனைவராலும் அறியபட்டவர் யாஷிகா ஆனந்த். நள்ளிரவு இசிஆர் சாலையில் தமது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
நடுராத்திரி 1ம் மணி இருக்கும்… சாலை தடுப்பில் மோதி தலை குப்புற விழுந்து கார் விபத்தில் சிக்கியது. விழுநத் வேகத்தில் காரில் இருந்தவர்களில் யாஷிகா ஆனந்த் தோழி வள்ளிசெட்டி பவனி ஸ்பாட்டில் இறந்து போனார்.
யாஷிகா ஆனந்தும், அவருடன் மேலும் 2 பேரும் படு காயங்களுடன் சீரியசாக உள்ளனர். சென்னையில் உள்ள பிரபல தனியார் மருதுதுவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
அவர்களில் யாஷிகா ஆனந்தின் நிலைமை படு சீரியசாக உள்ளதாம். அவரது இடுப்பு எலும்பு முற்றிலும் ஒடிந்து நொறுங்கிவிட்டதாம். படு மோசமான நிலையில் மிகவும் சீரியஸ் கண்டிஷனில் உள்ளாராம்.
யாஷிகாவின் உடல்நிலை குறித்து டெல்லியில் உள்ள அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் கூறி உள்ளனர். யாஷிகா உயிர்பிழைக்க வேண்டி அவரது ரசிகர்கள் இறைவனை வேண்டி வருகின்றனர்.