ரூ.2000 வாங்க எப்போ ரேஷன் கடைக்கு போகணும்…? தேதியை குறிச்சுக்கோங்க மக்களே…!
சென்னை: ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2000 ரூபாய் கொரோனா நிதி வழங்கும் திட்டம் வரும் 10ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை நாள்தோறும் அதி தீவிரமாக உலுக்கி வருகிறது. அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன. நாள்தோறும் நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாமல் உயர்ந்து கொண்டே செல்கிறது.
கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க வரும் திங்கள் முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டு ஊரடங்கில் மக்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என்றும் அவர் வேண்டி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந் நிலையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2000 ரூபாய் கொரோனா நிதி வழங்கும் திட்டம் வரும் 10ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் இன்று பேசிய போது இதை தெரிவித்த அமைச்சர் சக்கரபாணி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கப்பட உள்ளது என்றும் முதல்கட்டமாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறி உள்ளார்.