இந்தி தெரியுமா..? ‘சர்ச்சை’ வங்கி மேலாளர் டிரான்ஸ்பர்
அரியலூர்: இந்தி தெரியாததால் கடன் தர மறுத்த ஐஓபி வங்கி மேலாளர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் ஐஓபி வங்கி கிளை உள்ளது. அந்த வங்கியில், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணியம் என்பவர் 18 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளராக இருக்கிறார்.
தமக்கு சொந்தமான இடத்தில் கட்டடம் கட்ட லோன் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார். இது தொடர்பாக வங்கி கிளை மேலாளரை அணுகி உள்ளார். தமக்கு இந்தி தெரியாமல் கடன் தரமுடியாது என்று திருப்பி அனுப்பி விட்டதாக குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்ப விவகாரம் பெரிதானது. ஏற்கனவே இந்தி தெரியாது போடா டிரெண்டிங்கில் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.
இந்நிலையில் விவகாரம் பூதாகரமானதால் சர்ச்சை ஏற்படுத்திய வங்கி மேலாளர் விஷால் திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். இது குறித்து டிரான்ஸ்பர் ஆர்டரும் அவருக்கு அனுப்பப்பட்டு உள்ளது.