இன்றிரவு 'பவர்' காட்டும் நிவர்..! மக்களே பாதுகாப்பாக இருங்கள்....!!
சென்னை: பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல், தீவிர புயலாக மாறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையயடுத்து இன்று நண்பகலுக்குள் அதி தீவிர புயலாகவும் மாறி, மாமல்லபுரம் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் கரையை கடக்கும் போது 120கி.மீட்டர் முதல் 130கி.மீட்டர் வரை பலத்த காற்று வீசும். இன்னும் சொல்ல போனால் 140 கி.மீட்டர் வரையும் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஆகையால் புயல் காரணமாக நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களுலும் காற்றின் வேகம் மிக அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.