Ponmudi சொத்துகள்… கோர்ட் அதிரடி தீர்ப்பு
சென்னை: திமுக பொன்முடியின் சொத்துகளை முடக்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பை வழங்கி உள்ளது.
1.75 கோடி ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுகவின் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.
மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் அளித்து, தீர்ப்பையும் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந் நிலையில் அதன் முக்கிய கட்டமாக இன்று ஒரு தீர்ப்பை ஐகோர்ட் வழங்கி உள்ளது.
அதாவது, சொத்துகள் முடக்கம் தொடர்பாக தீர்ப்பை வெளியிட்டு உள்ளது. அதில் பொன்முடி சொத்துகளை முடக்கம் செய்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது. அது தவறானது என்றாலும் அதை மாற்ற முடியாது.
இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அவர்களின் அதிகாரத்துக்கு உட்பட்டு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி உள்ளது. இந்த தீர்ப்பை நீதிபதி ஜெயசந்திரன் வெளியிட்டு இருக்கிறார்.
நேற்றைய தினம் பொன்முடிக்கு சிறை தண்டனை விதித்த அதே நீதிபதி தான் இன்றும் இத்தகைய தீர்ப்பை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.