அட.. இது என்ன அதிசயம்…! மனித பற்களுடன் மீன்..! தீயாய் ஒரு போட்டோ
மனிதனுக்கு இருக்கும் பற்களை போல பல்வரிசை கொண்ட மீன் ஒன்றின் போட்டோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்தவர் நாதன் மார்ட்டின். மீன்பிடிப்பது தான் இவரது தொழில். கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமது சகோதரருடன் மீன்பிடிக்க சென்றார்.
அவர்கள் வீசிய வலையில் ஒரு அதிசய மீன் சிக்கியது. அதாவது ஆட்டு தலையுடன் கூடிய மீன் ஒன்று மாட்டியது. இந்த மீனின் பற்கள் அச்சு அசலாக மனிதர்களுக்கு இருக்கும் பற்கள் போலவே உள்ளது.
இந்த மீனுக்கு ஏழைகளின் நண்டு என்று பெயராம். சமைத்து சாப்பிட்டால் டேஸ்ட் சூப்பராக இருக்கும் என்று அந்நாட்டினர் கூறுகின்றனர். பாறை இடுக்குகளில் வாழும் இந்த மீன் வலையில் அவ்வளவு எளிதில் சிக்காது.
முன்வரிசையில் மட்டும் பற்கள் இல்லாமல் வாயின் உள்ளேயும் பற்களை உள்ளது. இந்த மனித பற்கள் கொண்ட மீன் போட்டோ தான் இப்போது இணையத்தில் தாறுமாறாக டிரெண்டாகி வருகிறது. மீனின் போட்டோவை பார்க்கும் நெட்டிசன்ஸ் ஆஹா, ஓஹோ என்று பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.