Sunday, May 04 12:11 pm

Breaking News

Trending News :

no image

7 மாவட்டங்களில் முழு முடக்கமா…? வெளியான புதிய தகவல்…!


சென்னை: கொரோனா தொற்று அதிகமுள்ள 7 மாவட்டங்களில் முழு முடக்கம் விதிக்கலாமா என்று தமிழக அரசு ஆலோசனை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்று எங்கோ போய்விட்டது. இன்று மட்டும் 26 ஆயிரத்து 465 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தின் கொரோனா தொற்று பாதிப்பு வரலாற்றில் அதிக எண்ணிக்கை இன்றுதான் பதிவாகி இருக்கிறது. இந்த அதிக எண்ணிக்கை சுகாதார துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

குறிப்பாக சென்னையில் ஒரே நாளில் 6738 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 22,381 பேர் குணம் பெற்றிருந்தாலும் இன்னமும் 1,35,395 சிகிச்சையில் இருக்கின்றனர்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின், சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா பரவல் குறித்து ஆலோசனையும் நடத்தி உள்ளார்.

இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, மதுரை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. கொரோனா தொற்று உச்சத்தில் உள்ள மாவட்டங்களில் மட்டுமாவது தற்காலிகமாக முழு முடக்கம் அறிவிக்கலாமா என்று முதலமைச்சர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Most Popular