ஸ்டாலின் ஜி….! டெல்லியில் இருந்து போனில் வந்த பிரதமர் மோடி…ஜி..!
டெல்லி: கொரோனா பரவல் குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை வீரியமாக இருக்கிறது. கிட்டத்தட்ட நாள்தோறும் தொற்று பாதிப்பு எதிர்பாராத வகையில் பதிவாகி வருகிறது. தொற்று பரவல் சங்கிலியை உடைக்கும் வகையில் தமிழகத்தில் வரும் திங்கட்கிழமை முதல் 2 வாரங்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா முழு ஊரடங்கை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை, பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு அறிவிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக தெரிகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் கூடுதலாக மருத்துவ உதவிகள் வேண்டும் என்று அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.
தமிழகம் போன்று இமாச்சலப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களை தொடர்பு கொண்டும் பிரதமர் மோடி விவரங்களை கேட்டறிந்துள்ளார்.