‘போலீசை’ உள்ள வச்ச தல…! தில் தோனி…!
சென்னை: தல தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
தோனியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது… இந்திய கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன் என்பது ரசிகர்கள் அவருக்கு சூட்டிய மகுடம். புகழின் உச்சத்தில் அவர் இருந்த போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
இது பற்றி ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் என்பவர் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து, தமது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி தோனி அவருக்கு எதிராக 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு 15நாட்கள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், மேல் முறையீடு செய்ய ஏதுவாக, 30 நாட்கள் வரை தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டு உள்ளது. தோனி தொடர்ந்த வழக்கின் மூலம் சூதாட்டத்தில் அவர் ஈடுபடவில்லை என்பது தெரிவதாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர். தலைக்கு தில்ல பாத்தியா? என்ற ரேஞ்சிலும் பேசி வருகின்றனர்.