Sunday, May 04 11:42 am

Breaking News

Trending News :

no image

ஒரே போன்… கைதில் இருந்து தப்பிய எஸ்பி வேலுமணி…? பரபர தகவல்கள்


சென்னை: ஒற்றை போன் காலால் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் கைது நடவடிக்கை தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டு உள்ள விவரம் இப்போது ஹாட் டாபிக்.

கிட்டத்தட்ட தமிழகமே பரபரத்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் அவரது வியாபார தொடர்புகள், உறவினர்கள் ஆகியவற்றை மையமாக கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நேற்று நடந்து முடிந்தது. காலை 6 மணிக்கு ஆரம்பித்த ரெய்டு, விசாரணை மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் நடந்தது.

என்ன நடக்கிறது..? என்ன கைப்பற்றப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் அனைத்தும் அட்சரம் பிசகாமல் அப்படியே லஞ்சஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வேலுமணிக்கு எதிராக கூறப்பட்ட புகார்கள், ஆதாரங்கள் அடிப்படையில் அவர் மீது எப்ஐஆர் போடப்பட்டது. இந்த எப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டிய பொறுப்பு லஞ்ச ஒழிப்புத்துறையில் இருக்கும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளிக்கப்பட்டது.

முக்கியமான வழக்குகள், ரெய்டின் போதே கைது என பரபர நடவடிக்கைகளுக்காவே சிறப்பு புலனாய்வு குழுவிடம் ரெய்டு சமாச்சாரம் ஒப்படைக்கப்பட்டது. ரெய்டு தினத்தன்று மாலை 4 மணிக்கு மேல் கைது என முதலில் முடிவு செய்யப்பட்டு இருந்ததாம்.

அதற்கான வழிமுறைகள், ஆலோசனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டதாம். ரெய்டு நடக்க, நடக்க மறுபுறம் ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் தொடர் டிஸ்கஷனில் இருந்துள்ளனர். இந்த ஆலோசனைக்கு பின்னர் நடந்த ஒரு  டுவிஸ்ட் தான் வேலுமணி கைது நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

இந்த கைது நடவடிக்கை என்பதை கடைசி வரை போராடி மாற்றியவர் ஓபிஎஸ் என்கின்றனர் அவர்கள். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு போன் போட்டு கடைசி கட்ட நிலவரத்தை திருப்பி விட்டவர் என்கின்றனர்.

அதனால் அவர் தங்கியிருந்த எம்எல்ஏ ஹாஸ்டலில் ரெய்டு முற்று பெறாமல் நீடித்துக் கொண்டே இருந்தது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஓபிஎஸ்சும் கடைசி நேர உதவிகளினால் கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் ரெய்டு முடிந்து குற்றப்பத்திரிக்கை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்க செய்ய உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கைது நடவடிக்கை, ஓபிஎஸ் போன் என அதற்கு பின்னர் தான் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் எஸ்பி வேலுமணி சந்தித்ததும் இப்படி கவனிக்கப்பட வேண்டிய அம்சம்….!

Most Popular