முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டிய சைக்கிள் விலை இவ்வளவா…? என்ன ஸ்பெஷல்..?
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டிய சைக்கிளில் பல்வேறு வசதிகள் அடங்கியிருக்கின்றன.
யாருமே எதிர்பார்க்கவில்லை… சில நாட்களுக்கு முன்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மகாபலிபுரத்துக்கு சைக்கிளிலே சென்றார். அவருக்கு பாதுகாப்பாக சென்றவர்களுக்கும் அதே பயணம்தான்.
ஒரு முதலமைச்சர் திடுதிடுப்பென்று சைக்கிள் மிதித்தபடி வருவதை கண்ட மக்கள் முதலில் நம்பவில்லை. இல்லை… அது முதல்வர் ஸ்டாலின் என்றவுடன் ஆச்சரியத்தின் விளிம்புக்கே சென்றனர். சிலர் கைதட்டி வரவேற்று, அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
சரி.. இப்போது விஷயத்துக்கு வருவோம்.. முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டிய சைக்கிளில் உள்ள அம்சங்கள், தொழில்நுட்பங்கள், குறிப்பாக விலை வா…வ் என்று சொல்ல வைக்கின்றன.
அவர் ஓட்டிய சைக்கிளின் வகை பெடல்ஸ் (pedaleza). இந்த சைக்கிளை டாய்ஜோ(daijo) என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் சென்னையை அடுத்த அம்பத்தூரை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. மொத்தம் 3 வகையான சைக்கிள்களை இந்த நிறுவனம் தயாரிக்கிறது…. விற்பனையும் செய்து கலக்கி வருகிறது.
இந்த பெடல்ஸ் வகை சைக்கிளில் பெடல்ஸ் சி2 என்ற மாடலை தான் முதலமைச்சர் ஸ்டாலின் பயன்படுத்தினார். அதன் விலை ரூ.81,500 ஆகும். குறிப்பாக 120 கிலோ எடை வரை உள்ளவர்கள் மட்டுமே இந்த சைக்கிளை பயன்படுத்த முடியும்.
சைக்கிளின் நீளம் 48 சென்டிமீட்டர். சைக்கிள் ப்ரேம் அலுமினியத்தால் டிசைன் செய்யப்பட்டது. பேட்டரியும், 250 watts திறன் கொண்ட மோட்டாரும் இந்த சைக்கிளில் இணைக்கப்பட்டு உள்ளது. சைக்கிளில் 7 கியர்கள் உள்ளன, பெடல் பண்ணினால் தான் மட்டுமே சைக்கிளை இயக்க முடியும்.
சைக்கிளில் ஏற்கனவே மாட்டப்பட்டு உள்ள மோட்டாரானது சைக்கிள் மிதிப்பதை ஈசியாக்கும். எல்சிடி திரை இருக்கிறது… சைக்கிள் முன்னே, பின்னே எல்இடி விளக்கு மாட்டப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் எந்த அளவுக்கு பெரிதாக பேசப்பட்டதோ அளவுக்கு இந்த சைக்கிள் பற்றிய விவரங்களும் பெரிதாக பேசப்படுகின்றன.