விடாதீங்க… சிவசங்கர் பாபாவை தூக்கில் போடுங்க..! பிரபல நடிகை ஆவேசம்….
சென்னை: பிரபல நடிகையான காஜல், சிவசங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள் என்று டுவிட்டரில் கொந்தளித்துள்ளார்.
சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் இருக்கிறது சுஷில் ஹரி சர்வதேச பள்ளி. அதன் நிறுவனர் சிவசங்கர் பாபா. அவர் மீதான பள்ளி மாணவிகளின் பாலியல் புகார்களை தொடர்ந்து தலைமறைவான அவர் கடும் தேடுதல் வேட்டைக்கு பின்னர் டெல்லியில் சிக்கினார்.
அவர் தமிழகம் கொண்டு வரப்பட்டது ஒரு பக்கம் இருந்தாலும், எதற்கு விசாரணை, நீதிமன்றம், போலீஸ் காவல் அவருக்கு உடனடி தண்டனை கொடுங்கள் என்று சமூக ஆர்வலர்கள், மனித உரிமை போராளிகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் பிரபல நடிகையான காஜல் ஒரு படி மேலே போய் சிவசங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள் என்று செமையாக கொந்தளித்துள்ளார். ஒரு டுவிட்டர் பதிவில் அவர் இப்படி பொங்கி இருக்கிறார்.
பாபாவை தூக்கிலிட வேண்டும் என்று கொந்தளித்துள்ள அவர், shame on you twitter என்று பதிவிட்டு டுவிட்டர் போட்டுள்ளார். ரேப்பிஸ்ட் பாபாவை பற்றி ஒரு வீடியோ வெளியிடலாம் என்று உள்ளேன், ஆனால் இந்த டுவிட்டர் அதை அப்லோட் ஆக்கவிடவில்லை.. இந்த வீடியோ அப்லோட் ஆகவில்லை என்று கடும் கோபமாக தெரிவித்து உள்ளார்.