67 நாள் கழித்து கொரோனா பத்தி குட் நியூஸ்…! மக்களே.. இனி டோண்ட் ஒர்ரி…!
டெல்லி: 67 நாட்கள் கழித்து கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 3 மடங்காக குறைந்திருப்பது, முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
கொரோனாவின் கோரத்தாண்டவம் 2வது ஆண்டாக 2021லும் உலக நாடுகளில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச்சில் தொடங்கிய முதல் அலை உச்சம் தொட்டது. அதன் பின்னர் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைய… மக்களும், அரசுகளும் நிம்மதி அடைந்தனர்.
ஆனால் உருமாறிய கொரோனா மீண்டும் என்ட்ரியாக நோய் பரவலானது உச்சக்கட்டத்தை தொட்டது. இது கொரோனா 2வது அலை என்று அறிவிக்கப்பட, தடுப்பூசி ஒன்று தான் தீர்வு என்று அதை நோக்கி அனைவரும் செல்ல ஆரம்பித்தனர். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் வேகம் எடுத்தன.
அதன் பலன் இப்போது தெரிய ஆரம்பித்து இருக்கிறது. கிட்டத்தட்ட 67 நாட்கள் கழித்து நேற்றைய தினம் தினசரி பதிவு என்பது 1 லட்சத்தை விட குறைந்து 95 ஆயிரத்து 101 ஆக இருக்கிறது. கொரோனா 2வது அலை இப்போது சரிவை கொண்டிருக்கும் நிலைதான் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறி இருக்கின்றனர்.
ஒரு வாரமாக இருந்த கொரோனா தொற்று சராசரியானது 1 பங்காக குறைய எடுத்துக் கொண்ட நாட்கள் 34 ஆகும். அதாவது இது முதல் அலையின் போது நடந்ததை விட 3 மடங்கு அதிகம். சரியாக சொல்ல வேண்டும் என்றால் கொரோனா பாதிப்பு சடாரென்று இறங்கு முகத்தை நோக்கி சென்று இருக்கிறது. இது ஒரு நல்ல அறிகுறி என்றும், கொரோனா 2வது அலை முடிந்தது என்று கூறலாம் என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.