பிரபல நிறுவனத்தின் கூல்டிரிங்ஸ் குடித்த சிறுமி…! உடல் நீலநிறமாகி… ஷாக் சம்பவம்
சென்னை: சென்னையில் பிரபல நிறுவனத்தின் கூல்டிரிங்சை குடித்த 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெசன்ட் நகரை சேர்ந்தவர் சதிஷ். அவருக்கு 13 வயதில் தாரணி என்ற மகள் இருக்கிறார். அவர் தமது வீட்டின் அருகில் உள்ள மளிகை கடை ஒன்றில் பிரபல நிறுவனத்தின் குளிர்பானமும், ரஸ்னாவும் வாங்கி பருகி உள்ளார்.
அதை குடித்த சில நிமிடங்களில் நடந்த சம்பவம் அனைவரையும் பதற வைத்தது. வாந்தி எடுத்த தாரணியின் மூக்கில் இருந்து சிவப்பு நிறத்தில் சளி வந்திருக்கிறது. பதறியடித்த அவரது சகோதரி உடனடியாக பெற்றோரிடம் கூறி உள்ளார்.
அவரது அம்மா வந்து பார்ப்பதற்குள் மயங்கி கீழே சரிந்த சிறுமியின் உடல் நீலம் பாய்ந்தது. உடனே பதறியடித்த பெற்றோர் தாரணியை அருகில் உள்ள ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் உடலில் உயிர் இல்லை என்று கூறி அதிர வைத்தனர்.
இது பற்றிய தகவல் போலீசுக்கு போக அவர்கள் உடனடியாக சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி குடித்த குளிர்பானத்தின் மாதிரிகளையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி இருக்கின்றனர்.
அதன் முடிவுகள் பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் கூறும் அறிவுரை மிகவும் முக்கியமானது.
அவர்கள் கூறி உள்ளதாவது: குழந்தைகளை அவர்களாகவே சென்று கடைகளில் ஸ்நாக்ஸ், குளிர்பானம் வாங்கி அருந்த அனுமதிக்காதீர்கள். ஜங்க் உணவுகளை வாங்கி தர வேண்டாம். எந்த உணவு வகையாக இருந்தாலும் அதை வீட்டிலே தயாரித்து தருவது ஆரோக்கியம்.
மளிகை கடைகளிலும் தமது குழந்தைகள் வந்து தீனி, கூல்டிரிங்ஸ் உள்ளிட்ட பண்டங்களை கேட்டால் தராமல் தவிர்க்குமாறு பெற்றோர்கள் கேட்டுக் கொள்வது நல்லது என்று கூறி இருக்கின்றனர்.