கலாஷேத்ரா… கதி கலங்க வைக்க வரும் சூப்பர் WOMEN
சென்னை: கலாஷேத்ரா பாலியல் விவகாரத்தை கையில் எடுத்து விசாரணை நடத்த லத்திகா சரண் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது.
திருவான்மியூரில் உள்ளது புகழ்பெற்ற கலாக்ஷேத்ரா கல்லூரி. அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக பேராசிரியர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பானது. குறிப்பாக 4 பேராசிரியர்கள் அளித்த தொல்லைகளை பொறுக்காமல் மாணவிகள் வெகுண்டெழுந்து போராட்டம் நடத்த, விவகாரம் சட்டமன்றம் வரை எதிரொலித்தது.
பாலியல் புகார், மாணவிகள் போராட்டம், காவல்துறையில் புகார் என விவகாரம் மெகா பிரச்னையாக மாற, உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவானது. வழக்கம் போல், எஸ்சான அவர், போனை ஏரோபிளேன் மோடில் மாற்றி, தோழி வீட்டில் அடைக்கலமானர்.
விடாது துரத்திய போலீசார் கொத்தாக பிடித்து செல்ல, இதுபோதாது என்று குரல்கள் ஒலிக்க தொடங்கின. இந் நிலையில் இந்த பாலியல் விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்த முன்னாள் டிஜிபி லத்திகா சரண் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், மருத்துவர் ஷோபா வரதாமான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நேற்று கலாக்ஷேத்ரா தல்லூரி அறக்கட்டளை தலைவர் தலைமையில் கூட்டம் நடந்தது. அதன் பின்னணியில் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே 4 பேராசிரியர்களில் ஹரி பத்மன் சஸ்பென்ட் செய்யப்பட, 3 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ள நிலையில் விசாரணை குழு மூலம் இந்த சம்பவம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.