Sunday, May 04 12:23 pm

Breaking News

Trending News :

no image

பிரபல நடிகர் நடிக்க வேண்டிய படமா பீஸ்ட்…? கோலிவுட்டில் உலா வரும் ‘பர்ஸ்ட் லுக்’ சந்தேகம்


சென்னை: பிரபல நடிகர் நடிக்கவிருந்து போட்டோ ஷூட் நடத்திய படம் தான் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் கதையா என்று கோலிவுட்டில் ஒரு தகவல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நடிகர் விஜய்யின் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. இயக்குநர் நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையில் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளை நடிகர் விஜய்யின் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட ஏதுவா இன்று மாலை 6 மணிக்கு தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இந்த படத்துக்கு பீஸ்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கையில் நவீன ரக துப்பாக்கியுடன் விஜய்யின் போஸ் கண்டு ரசிகர்கள் துள்ளி குதித்து வருகின்றனர்.

ஆனால் வழக்கம் போல ஒரு படத்தின் முக்கிய தருணங்களில் அது பற்றிய பல்வேறு தகவல்கள் உலா வரும். அப்படித்தான் இப்போது ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

அதாவது…. பிரபல முன்னணி நடிகர் நடிப்பில் உருவாக இருந்த படத்தின் கதையா பீஸ்ட் கதை என்று தகவல்கள் உலா வருகின்றன. நெல்சன் திலீப்குமார் டைரக்ஷனில் முதலில் உருவாக இருந்து பின்னர் நின்று போன வேட்டை மன்னன் என்ற படத்தின் கதையா என்று கோலிவுட்டில் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நின்று போன  படம் தான் வேட்டை மன்னன். இப்படத்தின் கதாநாயகன் நடிகர் சிம்பு. இப்போது அந்த படத்தின் கதை தான் பீஸ்ட் படத்தின் கதையா என்று கதைக்க ஆரம்பித்து உள்ளனர்.

வேட்டை மன்னன் படத்துக்காக சிம்புவின் போட்டோ ஷூட்டும், தற்போது பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் பாருங்கள் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர். எது எப்படி இருந்தாலும்… இது தளபதி விஜய் படம்… மாஸாக தான் இருக்கும், மற்றவற்றை பற்றி கவலையில்லை என்று கூறுகின்றனர் விஜய் ரசிகர்கள்..!

Most Popular