Sunday, May 04 12:18 pm

Breaking News

Trending News :

no image

அண்ணாத்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் பெயர் இதுவா..? குஷியில் கும்மாளமிடும் ரசிகர்கள்


சென்னை: அண்ணாத்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்… இவருக்கு அறிமுகம் தேவையில்லை… சிறியோர் முதல் பெரியவர் என உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் இருக்கின்றனர்.

அரசியலுக்கு ரிட்டயர்மெண்ட் கொடுத்துவிட்ட இவரின் முழு கவனமும் அண்ணாத்த படத்தில் தான் உள்ளது. அந்த படத்தின் தமது போர்ஷனை முடித்துக் கொடுத்துவிட்டு பக்காவாக அடுத்த படம் பண்ணலாமா என்ற யோசனையில் உள்ளார்.

இயக்குநர் தேசிங்கு பெரியசாமி படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்று கூட செய்திகள் கசிந்தன. ஆனால் அது பற்றிய எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.

அண்ணாத்த படம் பற்றி புதிது புதிதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இப்போது லேட்டஸ்ட் தகவல் தான் ரசிகர்களை உச்சக்கட்ட சந்தோஷத்தில் போல் உட்கார வைத்து இருக்கிறது.

அது…. அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பதுதான். அந்த படத்தில் மன்னவன் என்பது தான் ரஜினியின் கேரக்டர் பெயர் என்று தெரிய வந்துள்ளது.

மன்னவன் ரஜினிகாந்த் என்று ரசிகர்கள் இப்போது குஷி புராணம் பாடி வருகின்றனர். முன்னதாக, மன்னவன் என்ற பெயர் தான் அண்ணாத்த படத்தின் டைட்டிலாக வைக்கப்பட இருந்ததாம். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அந்த வைக்காமல் ரஜினியின் கதாபாத்திர பெயராக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Most Popular