Sunday, May 04 12:27 pm

Breaking News

Trending News :

no image

இன்றைய TOP 10 News…!


தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் TOP 10 செய்திகளை  பார்க்கலாம்:

மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி, காஷ்மீரில் இருந்து வரும் 20ம் தேதி தொடங்குகிறார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வார விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா 2024-25ம் ஆண்டு பட்ஜெட்டை இன்று சட்டசபையில் தாக்கல் செய்கிறார்.

மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் உதவிகளையும், 1598 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.

பிளஸ் 1 மற்றும் 12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வரும் 19ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.

தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.

636வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

அமெரிக்காவில் அலபாபா மாகாணத்தில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் பிரவீன் ராவோஜிபாய் படேல் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் தமிழ்நாடு, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் கைவண்ணத்தில் உருவாகி உள்ள சைரன் படம், இன்று தியேட்டர்களில் ரிலீசாகிறது.

Most Popular