பிரதமர் மோடியையே ஓரங்கட்டிய ஸ்டாலின்…! டெல்லியில் சூப்பர் ‘மூவ்’..!
டெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர் மோடியை ஓவர்டேக் செய்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பு தேசிய அளவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக கவனிக்கப்பட்டு உள்ளது.
ஜனாதிபதியை சந்தித்துவிட்டு, செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதலமைச்சராக நான் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக டெல்லி வந்து ஜனாதிபதியை சந்தித்தேன் என்று கூறி மதுரையில் கருணாநிதி பெயரில் அமைய இருக்கும் பல்நோக்கு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, கடற்கரையில் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நினைவு தூண் திறப்பு விழா ஆகியவற்றை நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளேன். அதற்கு அவர் ஒப்புதல் தந்துள்ளார் என்றார்.
. கடந்தகால அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடியை தான் இபிஎஸ் தலைமையிலான ஆட்சி அழைத்தது. அப்போதும் இப்போதும் பாஜக அதிமுக கூட்டணியில் இருந்தது ஒரு காரணம்.
திமுக ஆட்சியில் இருந்த போது மன்மோகன் சிங் பிரதமராக பலமுறை தமிழகம் வந்து திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி சென்றுள்ளார். இப்படிப்பட்ட தருணத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருக்க பிரதமரை அழைக்காமல் ஜனாதிபதியை அழைத்துள்ளார் ஸ்டாலின். அவரின் இந்த மூவ்வை தான் அரசியல் நோக்கர்கள் உற்று பார்த்து பேச ஆரம்பித்துள்ளனர்.
அதாவது, அண்மை காலமாக மத்திய அரசு அல்ல.. ஒன்றிய அரசு என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அழைத்தும், குறிப்பிட்டும் வருகின்றன. இது பாஜகவை கடும் அதிருப்தியில் கொண்டு போய் விட்டு உள்ளது. இதற்கான விளக்கங்களை திமுக அளித்தாலும் பாஜக தொடர்ந்து பிரிவானைவாத முத்திரையை திமுக மீது குத்தி வருகின்றனர். தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது கோபேக் மோடி என்பது உலக பேமஸானது.
அதை இன்னமும் மனதில் வைத்துக் கொண்டு பிரதமரை 2வது முறையாக சந்திக்க முதல்வர் ஸ்டாலினுக்கு டெல்லியில் அப்பாயின்ட்மெண்ட் கொடுக்கவில்லை என்றும் தமது முக்கியத்துவத்தை மேலும் உணர்த்த மற்றும் உயர்த்தும் வகையில் ஜனாதிபதியை சந்திக்க முடிவெடுத்தார் ஸ்டாலின் என்று கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
தேசிய அளவில் தமது மூவ் பற்றி பேசவேண்டும், தமிழக அளவில் நடக்க உள்ள பல்வேறு விழாக்களுக்கு ஜனாதிபதியை அழைக்க வேண்டும் என்று ஸ்டாலின் முடிவெடுத்தார் எனறும் காதை கடிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இதில் வேறு ஒன்றையும் அதி முக்கியமாக குறிப்பிடுகின்றனர் விஷயம் அறிந்தவர்கள். ஜனாதிபதியை சந்தித்து தேசிய அளவில் தமது அரசியல் கிராப்பை (graph) உயர்த்தி இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ராம்நாத் கோவிந்த் தமிழக வருகையின் போது வரவேற்பு ஏகபலமாக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளதாக ஒரு செய்தி உலாவிக் கொண்டு இருக்கிறது.
பாஜக எதிர்ப்பு முழக்கத்தை ஆழமாக எடுத்து வைக்கும் திமுகவின் இந்த மூவ்மெண்டுகளை மத்திய அரசு தரப்பும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு தான் இருக்கிறது என்று விவரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.