நடிகர்கள் ரஜினி, அஜித் உள்ளிட்டோரை மிரட்டிய இளைஞர்…! போலீஸ் பண்ணிய வேலை…!
சென்னை: நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை மிரட்டிய நபரை போலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்தது. அதில் நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன்… இன்னும் சிறிதுநேரத்தில் வெடித்துவிடும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
விழுந்தடித்துக் கொண்டு சென்னை இசிஆர் சாலையில் உள்ள அஜித் வீட்டுக்கு போன போலீசார் சல்லடை போட்டு தேடினர். ஆனால் ஒன்றும் சிக்காமல் போக, தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்தது என்று விசாரணையை தொடங்கினர்.
அந்த போன் விழுப்புரத்தை அடுத்த மரக்காணம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் என்ற 26 வயது இளைஞர் என்று தெரிந்தது. தொடர் விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிந்தது.
தொடர்ந்து இதுபோன்று செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்ததால் அவரிடம் போன் எதுவும் கொடுக்காமல் அவரது வீட்டார் வைத்துள்ளனர். ஆனால் 100 என்ற எண்ணை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்வாராம். எப்போது வீட்டை விட்டு வெளியே வந்தவர், கண்ணில் பட்டவரின் மொபைல் போனை வாங்கி இப்படி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
புவனேஸ்வரன் மீது இதுபோன்று ஏராளமான வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்ததாக புகார்கள் உள்ளதால் போலீசாருக்கு பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. இதையடுத்து அவரை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துமவனையில் சேர்க்க முடிவெடுத்துள்ளனர்.