கெத்து..! மாஸ்..! கமலின் விக்ரம் 'பர்ஸ்ட் லுக்' ரிலீஸ்..!
சென்னை: கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் மாஸாக ரிலீசாகி இருக்கிறது.
அரசியலில் இருந்தாலும் இன்னமும் நடிப்பை கைவிடவில்லை உலக நாயகன் கமல்ஹாசன். கட்சி வேலைகள் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் நடித்தும் வருகிறார். அவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் விக்ரம்.
கமலை இயக்குபவர் லோகேஷ் கனகராஜ். அனிருத் படத்துக்கு இசை. இன்று மாலை 6 மணிக்கு விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை மிரட்டி வருகிறது.
வெறித்தனமாக பர்ஸ்ட் லுக்கில் நடுவில் கமல், இரு புறமும் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் இருக்கின்றனர். இதன் மூலம் படத்தில் விஜய் சேதுபதியும், பகத் பாசிலும் கன்பார்ம்மாக நடிக்கின்றனர் என்பது உறுதியாகி விட்டது.
கமலின் விக்ரம் படம் பற்றிய எதிர்பார்ப்பு, படம் தொடங்கிய காலத்தில் இருந்து உருவாகி இருக்கிறது. படத்தின் மாஸ் ஆன டைட்டில் வீடியோ ஒன்று ஏற்கனவே வெளியாகி பட்டையை கிளப்பியது. இப்போது பர்ஸ்ட் லுக் ரசிகர்களை ஆனந்த கூத்தாட வைத்திருக்கிறது.