Sunday, May 04 12:20 pm

Breaking News

Trending News :

no image

தமிழகத்தில் முதல் முறையாக… கொரோனா தந்த ‘பெரிய’ அதிர்ச்சி..! மக்களே ஜாக்கிரதை


சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக டெல்டா பிளஸ் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியை தந்துள்ளது.

நாடு முழுவதும் இப்போது தான் கடந்த 2 வாரங்களுக்கு முன்பிருந்த நிலை மாறி இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு நாள் பாதிப்பு என்பது 50 ஆயிரமாக உள்ளது. கொரோனா 2வது அலை தீவிரம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

அண்மையில் மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம், ஆகிய மாநிலங்களில் டெல்டா பிளஸ் கண்டுபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் 40 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. அதன் பரவலை தடுக்கவும், கண்காணிக்கவும் அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந் நிலையில், அதிர்ச்சி அளிக்கும் வகையில் தமிழகத்தில் முதல் முறையாக டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர் சென்னையை சேர்ந்தவரா என்பது இன்னமும் தெரியவில்லை. அது பற்றி ஆய்வு செய்து வருகிறோம்.

1000க்கும் மேற்பட்ட சாம்பிள்களை ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். விரைவில் அதன் முடிவுகள் தெரிய வரும் என்று கூறினார். முன்னதாக, நாட்டில் 3வது அலை தவிர்க்க முடியாது. அடுத்த 8 வாரங்களில் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும் என்று எய்ம்ஸ் இயக்குநர் கூறியிருந்தது நினைவுக்கு வந்து போகிறது.

Most Popular