‘தாடி’ வச்சிருந்தா பெரிய டேஞ்சர்…! கொரோனா ஈசியா வந்துடுமாம்…!
கொரோனா பரவல் சமயத்தில் நீண்ட தாடி வைத்திருப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என்று தோல் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் மக்களின் வாழ்க்கை சூழல் ஒட்டு மொத்தமாக மாறிவிட்டது. வேலையின்றி, பணமின்றி, சாப்பாடு இன்றி பலரும் கஷ்டத்தின் பிடியில் அல்லாடுகின்றனர். கடைகள் ஒரு பக்கம் பூட்டியிருக்க மக்களி பெரும் தவிப்பில் இருக்கின்றனர்.
சலூன் கடைகளும் அடைக்கப்பட்டு இருப்பதால் பலரும் நீண்ட தாடி, மீசையுடன் புதருக்குள் இருந்து வருவது போல காட்சி தருகின்றனர். அதில் பலரும் மாஸ்க்கை மாட்டிக் கொண்டு போகும் போது யார் என்று அடையாளம் தெரியாத நிலை தான் இருக்கிறது.
இந் நிலையில் நீண்ட தாடி வைத்திருந்தால் கொரோனா போன்ற வைரசஸ்களால் ஆபத்து நிகழும் என்று தோல் மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். அதாவது மாஸ்க் போடும் போது அது நீண்ட தாடியை கவர் செய்வது இல்லை.
ஒழுங்கற்ற தன்மையுடன் இல்லாத முடியில் வைரஸ்கள் எளிதில் உள்ளே சென்று தங்கிவிடுமாம். அதனால் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்று தோல் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா தொற்றாளர்களிடம் நீங்கள் பழகும் பட்சத்தில் மாஸ்க்கை தாண்டியும், சில நேரங்களில் தாடியிலும் வைரஸ் செல்ல வாய்ப்புண்டு.
எனவே, கொரோனா காலத்தில் தாடியை க்ளீன் ஷேவ் செய்து வைத்து கொள்ள வேண்டும், சுத்தமாக இருக்க வேண்டும் என்று தோல் மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.