இது ஒன்றே போதும்…! ரஜினி மகள் ரிலீஸ் செய்த போட்டோ…!
சென்னை: தமது மகன்களை பாசமுடன் கட்டியணைக்கும் போட்டோவை வெளியிட்டு உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
பிரபல நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்தை அறிவித்து கிட்டத்தட்ட பல மாதங்கள் கடந்து விட்டது. இரு தரப்பிலும் மீண்டும் நல்லுறவை ஏற்படுத்த பல தருணங்களில் முயற்சித்ததாக தகவல்கள் கசிந்தன. ஆனால் இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமல்ல திரையுலகத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.
இந் நிலையில் டுவிட்டர் பதிவில் லேட்டஸ்ட்டாக ஒரு போட்டோவை வெளியிட்டு அசத்தி உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தமது மகன்களை பாசமுடன் கட்டிணைக்கும் போட்டோக்கள் தான் அவை. மகன்களை பாசம் பொங்க கட்டியணைக்கும் அந்த காட்சிகள் பார்ப்போரை நெகிழ செய்கிறது.
அந்த டுவிட்டர் பதிவில் ஒரு வாக்கியத்தை பதிவேற்றி உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். சில தருணங்களில்… மகன்களின் கட்டியணைத்தல் இருந்தால் போதும் என்று குறிப்பிட்டு உள்ளார். அதை பார்த்த பலரும் அருமை என்று பதில் கூறி உள்ளனர்.